விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் புதிய வேலை நிறுத்தம்!!

28 ஆவணி 2025 வியாழன் 22:24 | பார்வைகள் : 505
பிரான்ஸில் வான்வழி கட்டுப்பாட்டு அதிகாரிகள் செப்டம்பர் 18ஆம் திகதி தேசிய அளவில் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக பெரும்பான்மைக் சங்கமான SNCTA அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் செப்டம்பர் 19 காலை வரை நீடிக்கும். அவர்கள் 2024ஆம் ஆண்டுக்கான சம்பளங்களில் பணவீக்கத்தைக் (inflation) முழுமையாக சரிசெய்ய வேண்டும் என்றும், தொழில்முறை நிர்வாகத்தில் மாற்றம் தேவைப்படுகின்றது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
SNCTA, பலமுறை சமூக உரையாடலுக்கு முயற்சி செய்ததாகவும், ஆனால் அதில் வெற்றி கிடைக்காததால் வேலையின்மூலம் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கடந்த வேலைநிறுத்தங்கள் விமான போக்குவரத்தை கடுமையாக பாதித்துள்ளன.
SNCTA, தற்போதைய நிர்வாகம் நம்பிக்கையின்மை மற்றும் தண்டனைக் கோட்பாடுகளை பின்பற்றுவதாகவும், இதில் ஆழமான மாற்றம் தேவைப்படுவதாகவும் வலியுறுத்துகிறது.