உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு துக்க தினம் அனுஷ்டிப்பு

29 ஆவணி 2025 வெள்ளி 05:41 | பார்வைகள் : 237
உக்ரைனில் தலைநகரில் ரஷ்யா நேற்றிரவு நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் துக்க தினம் அனுஷ்டிப்பதாக கியேவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார்.
ூன்று குழந்தைகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 38 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கியேவின் டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாக கியேவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறுகிறார்.
தலைநகரில், டார்னிட்ஸ்கி, டினிப்ரோவ்ஸ்கி, ஷெவ்சென்கிவ்ஸ்கி, ஹோலோசிவ்ஸ்கி மற்றும் டெஸ்னியன்ஸ்கி மாவட்டங்களில் பல சேதமடைந்த கட்டிடங்கள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.
அங்கு 120 பேர் வசித்து வந்த ஒரு குடியிருப்பு கட்டிடம், ஒரே இரவில் ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்ட பின்னர் பகுதியளவு இடிந்து விழுந்தது.
ரஷ்யத் தாக்குதலில் ஐரோப்பிய ஒன்றிய குழு தங்கியிருக்கும் கட்டிடம் தேசமடைந்தது.
அதுபோன்று பிரித்தானியாவின் பிரிட்டிஸ் கவுன்சில் கட்டிடமும் கடுமையாக சேதமடைந்தது.