சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த உதவும் தேன் !!
29 பங்குனி 2021 திங்கள் 06:25 | பார்வைகள் : 9797
தூய்மையான தேனில், என்சைம்கள், புரதங்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை குறைந்த அளவே காணப்படும்; இது ஒருவரின் உடலுக்கு தேவையான ஆற்றல் அளவை சரிவர பங்களிக்க உதவுகிறது.
சருமத்தில் இருக்கும் குழிகளில் காணப்படும் அழுக்குகளை உறிஞ்சி, சருமத்தை சுத்தப்படுத்த தேன் பயன்படுகிறது; தேன் ஒரு இயற்கை ஆன்டி செப்டிக்காக இருப்பதால், அது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
பாக்டீரிய தொற்றினால், முகப்பருக்கள் ஏற்பட்டிருந்தால் அதை போக்க தேன் உதவும்; தேன் ஒரு நல்ல ஈரப்படுத்தியாக இருப்பதால், அது முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகளை குணப்படுத்தவும் உதவும்.
இதய ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் உதவுகிறது. உணவு முறையில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துவது நல்லது.
தினந்தோறும் தேனை முகத்தில் தடவுவதால், எண்ணற்ற நன்மைகளை பெறலாம். தேனை பயன்படுத்தி முகத்தில் ஏற்படும் முகப்பரு, வடு, கரும்புள்ளிகள் ஆகியவற்றை போக்க உதவும். மேலும் இது வறண்ட சரும பிரச்சனைகளையும் தீர்க்க உதவும்.