ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வை அறிவித்த CSK வீரர் அஷ்வின்

29 ஆவணி 2025 வெள்ளி 07:41 | பார்வைகள் : 121
ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அஷ்வின் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த ரவிச்சந்திரன் அஷ்வின், கடந்த 2023 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த அஷ்வின், தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில், 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
அதன்பின்னர், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடி வந்த அஷ்வின், 2025 ஐபிஎல் தொடரில் மீண்டும் CSK அணிக்காக விளையாடினார்.
இந்த தொடரில், 9.75 கோடிக்கு வாங்கப்பட்ட அஷ்வின் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை எனவும், இதன் காரணமாக வரும் 2026 ஐபிஎல் தொடரில் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.
இது ஒரு முடிவு மட்டுமல்ல மற்றொரு தொடக்கம் என தெரிவித்துள்ள அஸ்வின், மற்ற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை அணிக்காக 8 தொடர்களில் 97 போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின், 90 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.