Paristamil Navigation Paristamil advert login

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்; ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்; ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு

29 ஆவணி 2025 வெள்ளி 12:48 | பார்வைகள் : 147


உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜப்பானின் டோக்கியோவில், இந்தியா - ஜப்பான் பொருளாதார மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும். ராணுவம், விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இந்தியாவில் பொருளாதாரம், அரசியலில் நிலைத்தன்மை நிலவுகிறது.


இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நாடு. ஜப்பான் நாட்டின் வணிகத்திற்கு இந்தியா ஊக்கமளித்து வருகிறது. ஏஐ, செமி கண்டக்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக் மற்றும் விண்வெளி துறை ஆகியவற்றில் இந்தியா துணிச்சலான பல முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும்.

13 பில்லியன் டாலர்கள்

இந்தியா பொருளாதாரம் நிலையாக உள்ளது. ராணுவம், விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. மெட்ரோ முதல் புல்லட் ரயில் வரை ஜப்பானுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது. ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 13 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

முதலீடு செய்யுங்கள்

இந்தியாவின் மெட்ரோ முதல் செமிகண்டக்டர் வரை பல்வேறு துறைகளில் ஜப்பான் முக்கிய பங்காற்றி வருகிறது. குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே பல ஜப்பானிய வணிக தலைவர்களுடன் தனிப்பட்ட உறவுகள் இருந்தது. இந்தியாவில் ஏராளமான தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய வேண்டும். உலகிற்காக உற்பத்தி செய்யுங்கள். இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்