தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்த விஷால்!

29 ஆவணி 2025 வெள்ளி 13:51 | பார்வைகள் : 165
நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வந்த நிலையில் இன்று திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர்.நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்து வரும் நிலையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே தனது திருமணம் என உறுதியாக கூறியிருந்தார். இதற்கிடையே விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் காதல் மலர்ந்தது. அப்போது ஆகஸ்டு 29 தனது பிறந்தநாள் அன்றே தனது திருமணத்தையும் திட்டமிட்டிருப்பதாக விஷால் கூறியிருந்தார்.
ஆனால் அவர் வாக்குறுதி அளித்தப்படி நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் செப்டம்பரில் முடிய உள்ளதால் அதன் பின்னர் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளாராம். அதனால் இன்று நெருங்கிய குடும்பத்தினர் சூழ விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
இன்று விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.