அரிசி மா சப்பாத்தி

29 ஆவணி 2025 வெள்ளி 14:51 | பார்வைகள் : 111
அரிசி மாவிலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி கோதுமை மாவு சப்பாத்தி போல் அல்லாமல் சற்று வித்தியாசமான சுவையாக இருக்கும். எப்போதும் கோதுமை சப்பாத்தி சாப்பிட்டு சளித்துப்போனால் இந்த டிஷ் டிரை பண்ணி பாருங்க. இது மிகவும் மென்மையானவை மற்றும் ஆரோக்கியமானதும்கூட. அவை எளிதில் ஜீரணமாகும், இது பசையம் உணர்திறன் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான சப்பாத்தியை எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். இந்த செய்முறையை மாஸ்டர் செஃப் பங்கஜ் படோரியா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அரிசி சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்...
அரிசி மாவு- 1 கப்
உப்பு- 1/4 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி
தண்ணீர்- 1 மற்றும் 1/4 கப்
முதலில், ஒரு பாத்திரத்தில் போதுமான தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது, சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும், அடுப்பில் தீயைக் குறைத்து, மெதுவாக அரிசி மாவைச் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து, அடுப்பிலிருந்து இறக்கவும்.
மாவை பிசைந்த பிறகு, அதை ஒரு மூடியால் மூடி 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இது மாவை ஈரப்பதத்தை சிறப்பாக உறிஞ்ச உதவும்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு, மாவை வெளியே எடுத்து, கோதுமை மாவு பிசைவது போல் 5 நிமிடங்கள் நன்றாகப் பிசையவும். இது மாவை மென்மையாக மாற்றும்.
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு உருட்டுவது போல் வட்டமாக உருட்டவும். அரிசி மாவு ஒட்டாமல் இருக்க, ரொட்டிகளின் மீது சிறிது அரிசி மாவைத் தூவி உருட்டவும்.இறுதியாக, உருட்டிய மாவை சப்பாத்தி சுடுவது போல் இரு புறமும் வேகும் வரை திருப்பி போட்டு எடுக்கவும்.