Paristamil Navigation Paristamil advert login

எஸ் ஜே சூர்யா ரஜினிக்கு வில்லன் ஆகிறாரா ?.

எஸ் ஜே சூர்யா ரஜினிக்கு வில்லன் ஆகிறாரா ?.

29 ஆவணி 2025 வெள்ளி 14:51 | பார்வைகள் : 183


தன்னுடைய 74 ஆவது வயதிலும் தனது அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் ‘கூலி’ படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக ஒரு இடைவெளி விடப்பட்டிருந்தது. விரைவில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. முக்கியமானக் காட்சிகளை கோவாவில் படமாக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அவர் ஷூட்டிங்கில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்