Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் ஹோட்டலுக்கு வெளியே இறந்த நிலையில் பிரான்சுக்கான தென்னாப்பிரிக்க தூதுவர் !!

பரிஸ் ஹோட்டலுக்கு வெளியே இறந்த நிலையில் பிரான்சுக்கான தென்னாப்பிரிக்க தூதுவர் !!

30 புரட்டாசி 2025 செவ்வாய் 21:48 | பார்வைகள் : 552


பிரான்சில் உள்ள தென் ஆப்பிரிக்க தூதுவரும் முன்னாள் அமைச்சருமான என் கோசிநாதி இமானுவேல் மெதெத்வா (Nkosinathi Emmanuel Mthethwa), பரிஸில் உள்ள ஹயட் ஹோட்டலின் (l’hôtel Hyatt) 22வது மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

தற்கொலை செய்திருக்கலாம் என்ற அச்சத்தில் அவர் திங்கள் கிழமை முதல் தேடப்பட்டு வந்துள்ளார். ஹோட்டல் அறையில் ஜன்னலின் பாதுகாப்பு பூட்டு வெட்டப்பட்டிருந்ததையும், சிக்கலான தடயங்கள் ஏதும் இல்லாததையும் விசாரணை உறுதி செய்கிறது. இதனால், இது தற்கொலை என சந்தேகம் அதிகமாக உள்ளது.

மெதெத்வா கடந்த பெப்ரவரியில் பிரான்சில் தூதுவராக நியமிக்கப்பட்டார் மற்றும் யுனெஸ்கோவிற்கும் நிரந்தர பிரதிநிதியாக இருந்தார். அவர் தனது அரசியல் வாழ்க்கையை நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தொடங்கி, 1994-ல் ANC இளைஞர் பிரிவின் செயலாளராகவும், பின்னர் பாதுகாப்புத்துறை மற்றும் கலாசார அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அவரின் மரணம் தென் ஆப்பிரிக்காவுக்கும் உலகத் தளத்துக்கும் மிகுந்த இழப்பாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்