Paristamil Navigation Paristamil advert login

பட்ஜெட் 2026 மற்றும் நம்பிக்கையில்லா தீர்மான அச்சுறுத்தலில் Sébastien Lecornu அரசு!!

பட்ஜெட் 2026 மற்றும் நம்பிக்கையில்லா தீர்மான அச்சுறுத்தலில்  Sébastien Lecornu அரசு!!

30 புரட்டாசி 2025 செவ்வாய் 22:48 | பார்வைகள் : 263


20 நாட்கள் கடந்தும் தன் அமைச்சரவையை அறிவிக்காத பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு, அடுத்த வாரம் தனது அரசியல் வழிகாட்டுதல்களை அறிவிக்க உள்ளார். திங்கட்கிழமை அவர் பல கட்சித் தலைவர்களைச் சந்தித்து, வேலைக்கு ஆதரவான வரிவிலக்கு திட்டங்களை முன்வைப்பதாகவும், ஆனால் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அக்டோபர் 2ம் திகதி வேலைநிறுத்தமும், எதிர்க்கட்சிகளின் அழுத்தமும், அவரது நிலையை சிக்கலாக்கியுள்ளது. சமூகவாதிகளுடன் நடைபெறவுள்ள சந்திப்பு “இறுதி வாய்ப்பு” எனக் கருதப்படுகிறது. அதேசமயம், 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அக்டோபர் நடுப்பகுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய அவசரமும் நிலவுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்