Paristamil Navigation Paristamil advert login

இன்று முதல் ஆதார் இருந்தால் மட்டுமே இனி ரயில் முன்பதிவு

இன்று முதல் ஆதார் இருந்தால் மட்டுமே இனி ரயில் முன்பதிவு

1 ஐப்பசி 2025 புதன் 09:14 | பார்வைகள் : 101


ரயில்களில் டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண் கட்டாயம் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலாகிறது.

முன்பதிவுக்கான நேரம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி கணக்குகளை கொண்ட பயணிகள் மட்டுமே இனி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். அதாவது எந்த ஒரு ரயிலுக்கும் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் அனுமதிக்கப்படும்.

ஆதார் இணைப்பு இல்லாதவர்கள், இந்த நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது. அதே நேரம், நேரடியாக ரயில் நிலையம் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வதில் எந்த மாற்றமும் இல்லை. பொது முன்பதிவுக்கான 10 நிமிடம் நேரக்கட்டுபாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது;

உதாரணமாக நாளை (அக்.2) காலை 10 மணிக்கு ஒரு ரயில் புறப்படுகிறது என்றால் அதில் பயணிக்க விரும்புவோர் இன்று காலை 10 மணிக்கு அந்த ரயிலுக்கு முன்பதிவு தொடங்கினால் முதல் 15 நிமிடங்களுக்கு ஆதாரர் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே பொது முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கு முன்னர் இத்தகைய கட்டுப்பாடுகள் என்பது தட்கல் முறையில் முன்பதிவு செய்பவர்களுக்கு இருந்தது.

இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் டிக்கெட்டுகளில் முன்பதிவின் போது ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவே இந்த நடைமுறையை மத்திய ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்