Paristamil Navigation Paristamil advert login

ஐந்தாம் குடியரசின் மிக மோசமான ஜனாதிபதி மக்ரோன்! - கருத்துக்கணிப்பு!!

ஐந்தாம் குடியரசின் மிக மோசமான ஜனாதிபதி மக்ரோன்! - கருத்துக்கணிப்பு!!

1 ஐப்பசி 2025 புதன் 09:22 | பார்வைகள் : 389


ஐந்தாம் குடியரசு ஜனாதிபதிகளின் மிகவும் பொருத்தமற்ற ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் என பெரும்பான்மையான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட பத்தில் எட்டுப்பேர் (78% சதவீதமானோர்) இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். கடந்த எட்டரை ஆண்டுகளாக பதவியில் இருக்கும் ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், “மக்ரோன் தற்போது பொருத்தமான ஜனாதிபதி என நீங்கள் கருதுகிறீர்களா?” என கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பட்டது.

அதில் 22% சதவீதமானவர்கள் “ஆம்” எனவும், ஏனைய 78% சதவீதமானவர்கள் “இல்லை” என எனவும் தெரிவித்தனர்.

இந்த கருத்துக்கணிப்பினை Odoxa நிறுவனம் செப்டம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேற்கொண்டிந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பிரபலத்தன்மையில், புதிய பிரதமர் Sébastien Lecornu 32% புள்ளிகளுடனும், பத்து புள்ளிகள் குறைவாக 22% சதவீத புள்ளிகளுடன் ஜனாதிபதி மக்ரோனும் உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்