பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலர் உயிரிழப்பு
1 ஐப்பசி 2025 புதன் 10:30 | பார்வைகள் : 750
மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்றிரவு (30) இரவு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 147 பேர் காயமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் செபு மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் வரலாற்று சிற்றாலயங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
போகோ நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் இடிந்து, அங்கு கூடியிருந்தவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. செபு நகரில் சுமார் 10.6 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Phivolcs) சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று உறுதியளித்துள்ளது.
இருப்பினும் சிறிய கடல் அலை அச்சுறுத்தல் காரணமாக கடற்கரை பகுதிகளை விட்டு விலக இருந்ததாக அறிவுறுத்தியது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan