Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பைன்ஸில் பிறந்து சில மணி நேரங்களே சாலையோரம் கைவிடப்பட்ட குழந்தை

பிலிப்பைன்ஸில் பிறந்து சில மணி நேரங்களே சாலையோரம் கைவிடப்பட்ட குழந்தை

1 ஐப்பசி 2025 புதன் 11:30 | பார்வைகள் : 124


பிலிப்பைன்ஸில் டகியூகாராவ் நகரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பிஞ்சு குழந்தை ஒன்று அட்டைப் பெட்டியில் வைத்து சாலையோரம் கைவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 24ம் திகதி புதன்கிழமை அதிகாலை 6:50 மணியளவில் வழிப்போக்கர் ஒருவர் பெட்டியை கவனித்த போது அதில் பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் குழந்தையை கைவிட்டு சென்ற நபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்