Paristamil Navigation Paristamil advert login

விஜய் ஜனநாயகன் படத்திற்கு சிக்கலா?

விஜய் ஜனநாயகன் படத்திற்கு சிக்கலா?

1 ஐப்பசி 2025 புதன் 16:09 | பார்வைகள் : 163


தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தனது 69ஆவது படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. மேலும் விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சிக்கல் வந்துள்ளது. அதாவது ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் 2026 ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இது தவிர பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் தமிழ்நாட்டில் ஜனவரி 10 அன்று வெளியானாலும் மற்ற மாநிலங்களில் ஜனவரி 9 அன்று வெளியாக இருப்பதால் ‘ஜனநாயகன்’ படத்திற்காக ஒதுக்கப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது.அதுமட்டுமில்லாமல் இதன் வசூலும் பெரிய அளவில் பாதிக்கப்படும் எனவும் பேச்சு அடிபடுகிறது. இது தவிர சமீபத்தில் கரூர் பரப்புரையின் போது நடந்த விவகாரமும் ஜனநாயகன் படத்திற்கு சிக்கலாக அமையும் என சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்