கொங்கோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை
2 ஐப்பசி 2025 வியாழன் 05:25 | பார்வைகள் : 2010
கொங்கோவின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு எதிராக துரோகம் இழைத்தார் எனவும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் எனவும் கபிலா மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் கபிலாவிற்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
கபிலா, தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணை செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நகரில் கடைசியாகக் காணப்பட்ட அவர், தற்போது எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை.
கபிலா ருவாண்டா மற்றும் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சிக் குழுவுடன் இணைந்து அரசுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதாகவும், துரோகம், போர் குற்றம், சதி மற்றும் கிளர்ச்சி ஏற்பாடு செய்ததாகவும் நீதிமன்றம் அறிவித்தது.
கபிலாவை கைது செய்ய வேண்டுமெனவும் அவரிடமிருந்து பெருந்தொகை அபராதம் அறவீடு செய்யப்பட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan