Paristamil Navigation Paristamil advert login

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் பாதையை பின்பற்றுவோம்: பிரதமர் மோடி

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் பாதையை பின்பற்றுவோம்: பிரதமர் மோடி

2 ஐப்பசி 2025 வியாழன் 12:17 | பார்வைகள் : 126


டில்லியில் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் பாதையை பின்பற்றுவோம் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காந்தியின் உருவப்படங்கள் மற்றும் நினைவிடங்களில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், டில்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக காந்தி பிறந்த நாளையொட்டி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை:

துணிச்சலும், எளிமையும் கொண்டு மாற்றத்திற்கான கருவியாக செயல்பட்டவர் காந்தி. மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அத்தியாவசிய வழிமுறையாக சேவை மற்றும் இரக்கத்தின் சக்தியை அவர் நம்பினார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அவரது பாதையை நாம் தொடர்ந்து பின்பற்றுவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்