Paristamil Navigation Paristamil advert login

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்

2 ஐப்பசி 2025 வியாழன் 13:17 | பார்வைகள் : 103


அமெரிக்க வரிவிதிப்புகளுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புடின், இந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதில் இந்திய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான மாற்று நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக, அமெரிக்கா அல்லாமல் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் இந்தியா நெருக்கம் காட்டவும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்தாண்டு டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார். அதிபர் புடினின் இந்தப் பயணத்தின் மூலம், இந்தியா- ரஷ்யா இடையே பொருளாதாரம் மற்றும் ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்பு உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடைசியாக இருவரும் சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டின் போது சந்தித்து பேசினர். தொடர்ந்து, இரு வாரங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார்.

கடைசியாக 2021ல் ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்பாக அதிபர் புடின் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்