முதல் செசனிலேயே தெறிக்கவிட்ட சிராஜ்- தடுமாறும் மேற்கிந்திய தீவுகள்

2 ஐப்பசி 2025 வியாழன் 10:36 | பார்வைகள் : 113
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் 42 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியுள்ளது.
அணியின் ஸ்கோர் 12 ஆக இருந்தபோது தகெனரின் சந்தர்பால் ஓட்டங்கள் எடுக்காமல் சிராஜ் ஓவரில் அவுட் ஆனார். அடுத்து ஜான் கேம்ப்பெல் 8 ஓட்டங்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து, மொகம்மது சிராஜின் (Mohammed Siraj) மிரட்டலான பந்துவீச்சில் பிரண்டன் கிங் (13), அலிக் அதனசி (12) இருவரும் அவுட் ஆகினர். இதனால் 42 ஓட்டங்கள் எடுப்பதற்குள் மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1