Paristamil Navigation Paristamil advert login

முகமாலையில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

முகமாலையில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

2 ஐப்பசி 2025 வியாழன் 10:36 | பார்வைகள் : 149


கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முகமாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியுள்ளார். இதன்போது அப் பகுதியில் ஆபத்தான வெடிகுண்டுகள் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடிகுண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

வர்த்தக‌ விளம்பரங்கள்