விஜயின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை: வீடியோவை விமர்சித்த சீமான்

3 ஐப்பசி 2025 வெள்ளி 04:36 | பார்வைகள் : 110
விஜய் பேசிய காணொளியை பார்க்கும் போது அவரது இதயத்தில் காயமோ வலியோ இருப்பது போல் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: பாஜ அரசு எங்களை நாட்டு மக்களாகவே பார்ப்பதில்லை. உத்தரப்பிரதேசம் எந்த அளவுக்கு வரி செலுத்துகிறதோ அதே தான் நாங்களும் செலுத்துகிறோம் எங்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் சாவிற்கு ஸ்டாலின் போகவில்லை விஜய் சென்று பார்த்தார். விஜய் கூட்டத்தில் இறந்தவர்களுக்கு ஸ்டாலின் சென்று பார்க்கிறார். விஜய் போகவில்லை. உடனடியாக பாஜக அரசு உண்மை கண்டறியும் குழுவை அனுப்புகிறது.
மக்கள் தொண்டு
தேர்தல் வருவதால்தான் கரூரில் 41 பேர் இறந்ததற்கு உண்மை கண்டறியும் குழு வருகிறது. இதே போல் ஏன் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை வந்து பார்க்கவில்லை. அரசியல் என்பது மக்கள் மீது அதிகாரத்தை செலுத்துவது அல்ல. அது மக்களுக்கு ஆற்றப்படும் தொண்டு. அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமன தேவையையும் அதை நிறைவு செய்கிற சேவையும் ஆகும். காமராஜர் ஆட்சியில் உண்மையும் நேர்மையுமாக இருந்தது.
ஊழல்,லஞ்சம்
தற்போது ஊழல் லஞ்சமாக உள்ளது. இங்கு அரசியல் கட்டமைப்பே சாதி, மதம், சாராயம், திரைக்கவர்ச்சியாக உள்ளது. விஜய் பேசிய காணொளியை பார்க்கும் போது அவரது இதயத்தில் காயமோ வலியோ இருப்பது போல் தெரியவில்லை.
காரணம் யார்?
விஜய் பிரசாரத்திற்கு அந்த இடத்திற்கு போனதால் தான் அந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. அப்போது காரணம் யார்? மற்ற இடத்தில் நடக்கவில்லை இங்கே மட்டும் ஏன் நடக்கிறது என்று கேட்பது தவறு. எல்லா கூட்டத்திலும் மயங்கி விழுந்தார்கள் , இங்கு கூட்ட நெரிசல் அதிகமாகி சிக்கிக் கொண்டனர். மருத்துவமனையில் கத்தியால் குத்துப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களை ஒருவரைக் கூட பார்கவில்லை.
இப்படி சொல்லாதீங்க?
சிஎம் சார் என்று கூப்பிடுவது சின்ன பிள்ளை விளையாட்டுக்கு கூப்பிடுவது போல் உள்ளது. அவர் மீது உங்களுக்கு மதிப்பு இல்லாமல் போகலாம். உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் இந்த நாட்டில் பெரும் தலைவர்கள் அமர்ந்துள்ளனர். பெருந்தலைவர்கள் அமர்ந்திருந்த இடம் என்பதால் பார்த்து பேச வேண்டும். சிஎம் சார், சிஎம் சார் என்று பேசக்கூடாது. அது தன்மையான பதிவு அல்ல. இவ்வாறு சீமான் கூறினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1