Paristamil Navigation Paristamil advert login

’எனது ஆட்சிக்காலத்தில் 10% சதவீதத்தினால் முன்னேறிய பிரான்ஸ்!’ - தன்னைத்தானே பாராட்டிக்கொண்ட மக்ரோன்!

’எனது ஆட்சிக்காலத்தில் 10% சதவீதத்தினால் முன்னேறிய பிரான்ஸ்!’ - தன்னைத்தானே பாராட்டிக்கொண்ட மக்ரோன்!

2 ஐப்பசி 2025 வியாழன் 15:36 | பார்வைகள் : 842


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எட்டரை ஆண்டுகாலமாக பதவியில் உள்ளார். இந்த பதவிக்காலத்தில் பிரான்சின் வளர்ச்சி 10% சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். 

”நான் ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து பிரான்ஸ் 10% சதவீதத்தால் முன்னேற்றமடைந்துள்ளது. அதேவேளை ஜேர்மனி 3.44% சதவீதத்தால் மட்டுமே முன்னேற்றமடைந்துள்ளது!” என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார். இந்தமுன்னேற்றமானது ஐரோப்பிய மட்டத்தில் பொருளாதாரம், நாட்டின் கடன், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

பிரான்சின் உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு (GDP) 10% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இத்தாலி 7.8% சதவீதமாகவும், ஜேர்மனி 3.44% சதவீத முன்னேற்றத்தையுமே கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், வேலையில்லாதோர் எண்ணிக்கை வீழ்ச்சியையும், சர்வதேச சந்தைக்கான வர்த்தகத்தை முழுமையாக திறந்துள்ளதாகவும், தாராளமயமாக்கலாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்