Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : Chanel காட்சியறை கொள்ளை! - நால்வர் தலைமறைவு!!

பரிஸ் : Chanel காட்சியறை கொள்ளை! - நால்வர் தலைமறைவு!!

2 ஐப்பசி 2025 வியாழன் 18:13 | பார்வைகள் : 573


பரிசில் உள்ள Chanel காட்சியறை கொள்ளையிடப்பட்டுள்ளது. பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்படுள்ளன. 

பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள rue Royale வீதியில் உள்ள Chanel காட்சியறை, இன்று ஒக்டோபர் 2 ஆம் திகதி அதிகாலை 4.45 மணிக்கு உடைக்கப்பட்டது. SUV மகிழுந்து ஒன்றின் மூலம் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் , அங்கிருந்த பைகள், தோல் ஆடைகள் போன்ற பல பொருட்களை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் மொத்தம் நால்வர் எனவும்,  அவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்