Paristamil Navigation Paristamil advert login

தண்டவாளத்தில் நபர் விழுந்ததால் பரபரப்பு : RER-C போக்குவரத்து தடை !!

தண்டவாளத்தில் நபர்  விழுந்ததால் பரபரப்பு : RER-C போக்குவரத்து தடை !!

2 ஐப்பசி 2025 வியாழன் 21:17 | பார்வைகள் : 571


இன்றைய மதிய வேளையில் (02/10/2025), Vitry-sur-Seine (Val-de-Marne) தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட சண்டையொன்றில் ஒருவர் தொடருந்து பாதையில் விழுந்தார். இதனால் அப்பகுதியில் தொடருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக SNCF நிறுவனம் தெரிவித்துள்ளது.

சண்டை போக்குவரத்து தளத்தில் இடம்பெற்றதாகவும், அதன் காரணமாக அந்த நபர் தண்டவாளத்தில் விழுந்ததாகவும் SNCF இரண்டாவது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட நபர் வெளியேற்றப்படுவதற்குள் தொடருந்துகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தொடருந்து பாதுகாப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் காரணமாக, Bibliothèque François-Mitterrand, Juvisy மற்றும் Pont-de-Rungis நிலையங்களுக்கு இடையிலான இரு திசைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து மீண்டும் தொடங்கியபோதிலும் Champ-de-Mars, Juvisy மற்றும் Pont-de-Rungis இடையே இன்னும் போக்குவரத்து தடை நிலவுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்