பிரான்ஸில் ரஷ்ய எண்ணெய் கப்பல் கைப்பற்றல்: புடின் "கடற்கொள்ளை" என கடும் விமர்சனம்!!
.jpeg)
2 ஐப்பசி 2025 வியாழன் 23:29 | பார்வைகள் : 553
பிரான்ஸ் கடற்கரையோரம் நின்றிருந்த "Boracay" எண்ணெய் கப்பல், ரஷ்யாவின் "flotte fantôme" குழுவுடன் தொடர்புடையதென சந்தேகிக்கப்பட்டு, பிரான்ஸ் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதை ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் புடின் "களவாடல்" என கடுமையாக விமர்சித்துள்ளார். "அந்தக் கப்பல் நியூட்ரல் நீரில் இருந்தது, ஏதாவது போர் பொருட்கள் இருப்பதாக நினைத்திருப்பார்கள், ஆனால் அங்கே எதுவுமே இல்லை" என அவர் கூறியுள்ளார். மேலும், அந்தக் கப்பல் வேறு நாட்டின் கொடியுடன் இருந்ததையும், அது ரஷ்யாவுடன் தொடர்புடையதா எனத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் கப்பலின் கேப்டன் பிரான்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை சந்திக்கிறார். இந்த கப்பல் டென்மார்க்கில் ட்ரோன் விமானங்கள் பறந்த வழக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் அரசாங்கம் உள்நாட்டு அரசியல் சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தை மாற்ற முயற்சி செய்கிறது என புடின் குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரத்தில், ரஷ்யா "மாயக் கப்பல்கள்" மூலம் மேற்கத்திய தடைகளை மீறி எண்ணெய் ஏற்றுமதி செய்து வருவதை தடுக்க ஐரோப்பியர்கள் மேலும் ஒரு படி எடுக்க வேண்டும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1