Paristamil Navigation Paristamil advert login

‘சூர்யா 47’ படப்படிப்பு எப்போ?

‘சூர்யா 47’ படப்படிப்பு எப்போ?

3 ஐப்பசி 2025 வெள்ளி 10:43 | பார்வைகள் : 149


தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா தனது 47வது, 48வது படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார்.'

அதன்படி சூர்யாவின் 47 வது படத்தை ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும் சூர்யா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க நஸ்ரியா கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். சுசின் ஷியாம் இதற்கு இசையமைக்கப் போகிறாராம். அடுத்தது இந்த படத்தை சூர்யா புதியதாக தொடங்க உள்ள ‘ழகரம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க உள்ளார் என்று சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 நவம்பர் மாதத்தில் கேரளாவில் தொடங்கும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது அதன்படி அடுத்த மாதம் எர்ணாகுளத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், தற்போது காவல் நிலையம் தொடர்பான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்