Paristamil Navigation Paristamil advert login

49.3 அரசியலமைப்பைக் கைவிடும் அரசு!!

49.3 அரசியலமைப்பைக் கைவிடும் அரசு!!

3 ஐப்பசி 2025 வெள்ளி 12:10 | பார்வைகள் : 424


49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்துவதை கைவிட உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மை இல்லாத அரசாங்கம், சட்டங்களையும், வரவுசெலவு திட்டங்களையும் நிறைவேற்ற  அவ்வப்போது இந்த 49.3 அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி வாக்கெடுப்பின்றி நிறைவேற்றி வந்தது.

இந்நிலையில், சென்ற பிரான்சுவா பெய்ரூ அரசாங்கம் இந்த அரசியலமைப்பை பயன்படுத்தியதால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்து அரசாங்கத்தைக் கவிழ்த்திருந்தது. இந்நிலையில், புதிய அரசு “49.3” அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளது.

உடனடியாகவே எதிர்கட்சிகள் இதனை வரவேற்றுள்ளன.  “அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களே. அனைவரது கைகளிலும் துருப்புச் சீட்டுள்ளது. அனைவருக்கும் பொறுப்பும் உள்ளது!” என Sébastien Lecornu  தெரிவித்தார்.

பிரதமராக இருக்கும்போது 23 தடவைகள் இந்த 49.3 அரசியலமைப்பை பயன்படுத்திய Élisabeth Borne
இது தொடர்பில் தெரிவிக்கையில், “"பிரெஞ்சுக்காரர்களுக்கு சேவை செய்வதில் ஒன்றாக பொறுப்பான முடிவுகளை எடுக்க இன்று நமது நாட்டிற்குத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கட்டமைக்கும் பாதை இதுதான்," என குறிப்பிட்டார்.

இன்று காலை பிரதமர் Sébastien Lecornu மற்றும் மரீன் லு பென்னுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது

வர்த்தக‌ விளம்பரங்கள்