மெராக்கோ GenZ போராட்டத்தில் 3 பேர் உயிரிழப்பு

3 ஐப்பசி 2025 வெள்ளி 13:28 | பார்வைகள் : 217
மெராக்கோவில்நடைபெற்று வரும் GenZ போராட்டத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தில் சமூகவலைத்தள தடைக்கு எதிராக GenZ என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில், ஆட்சி கவிழ்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.
அதே போல் வட ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவிலும் GenZ எனப்படும் இளம் தலைமுறையினர் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சமீபத்தில், அகாடி பொது மருத்துவமனையில் 8 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் இந்த போராட்டம் உருவாக காரணமாக இருந்தது.
GenZ 212 என்னும் இயக்கத்தால், 5 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், 23 மாகாணங்களில் நூற்றுக்கணக்கான கார்கள், வங்கிகள், கடைகள் மற்றும் பொதுக் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறையினர் சுட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினரின் ஆயுதங்களை கைப்பற்ற முயன்றதாகவும் அதன் காரணமாகவே சுட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை மொராக்கோ, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது. இதற்காக பல பில்லியன்கள் முதலீட்டில் மைதானங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அதேவேளையில், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் நிதிபற்றாக்குறையால் மோசமான நிலையில் உள்ளபோது, மைதானங்கள் இங்கே மருத்துவமனைகள் எங்கே என்ற முழக்கம் எழுந்துள்ளது.
இந்த போராட்டத்தில் தற்போது வரை 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும்,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1