கரூர் சம்பவம்: அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

4 ஐப்பசி 2025 சனி 05:05 | பார்வைகள் : 103
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் விசாரித்து வருகிறார்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தக் குழுவில் கரூர் எஸ்பியை இணைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கேள்வி
மேலும் விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது: சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்கக்கூடாது. என்ன மாதிரியான கட்சி இது. தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை. தொண்டர்கள், ரசிகர்கள், மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறி விட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவெகவுக்கு என்ன பிரச்னை எனக்கூறினார்.
ஆதவ் அர்ஜூனா மீது என்ன நடவடிக்கை
விசாரணையின் போது சமூக வலைதளத்தில் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட பதிவு சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் காட்டப்பட்டது
அப்போது நீதிபதி கூறுகையில், புரட்சி ஏற்படுத்துவது போல பதிவிட்டுள்ளார்.இதற்கு பின்னால் இருக்கக்கூடிய பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுங்கள். இதுபோல் பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் பார்த்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது. தேவையான போது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு சின்ன வார்த்தை கூட பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும். இவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நீங்கள் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1