Paristamil Navigation Paristamil advert login

நாட்டின் மொத்த வரி வசூலில் 24 % செலுத்தும் ஜெயின் சமூகம்! ராஜ்நாத் சிங்

நாட்டின் மொத்த வரி வசூலில் 24 % செலுத்தும் ஜெயின் சமூகம்!  ராஜ்நாத் சிங்

4 ஐப்பசி 2025 சனி 09:09 | பார்வைகள் : 108


பொம்மைகள் முதல் ராணுவ டாங்கிகள் வரை, இந்தியா அனைத்தையும் உருவாக்குகிறது. இந்தியா உலகின் தொழிற்சாலையாக உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை'' என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஜெயின் சமூகத்தின் கொள்கை, கோட்பாடுகள் இந்திய கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஜெயின் சமூகத்தினர் உலகில் கடின உழைப்பாளியாக இருக்கின்றனர். இந்தியாவின் ஆன்மிக, கலாசார பயணத்தில் ஜெயின் சமூகத்தின் வரலாறு விலைமதிப்பற்ற பங்களிப்பை கொண்டுள்ளது.

மருத்துவம், விமானம், போக்குவரத்து மற்றும் கல்வித் துறையாக இருந்தாலும், ஜெயின் சமூகத்தினர் முன்னணியில் உள்ளனர். இந்தியாவில் ஜெயின் மக்கள் தொகை 0.5 சதவீதம் தான். ஆனால் அவர்கள் மொத்த வரி வசூலில் 24 சதவீத பங்களிப்பை வழங்குகின்றனர்.

பொம்மைகள் முதல் ராணுவ டாங்கிகள் வரை, இந்தியா அனைத்தையும் உருவாக்குகிறது. இந்தியா உலகின் தொழிற்சாலையாக உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்