Paristamil Navigation Paristamil advert login

வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை

வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை

4 ஐப்பசி 2025 சனி 10:40 | பார்வைகள் : 104


எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், அந்நாடு வரைபடத்தில் கூட இருக்காது,'' என ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.

ராஜஸ்தானின் அனுப்கார்க் நகரில் உள்ள ராணுவ முகாமில் அவர் பேசியதாவது: 'ஆப்பரேஷன் சிந்தூர்' 1.0 ன் போது காட்டப்பட்ட கட்டுப்பாடு இனியும் இருக்காது. புவியியல் ரீதியில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என சிந்திக்கும் அளவுக்கு இந்திய ராணுவத்தின் நடவடிக்கை இருக்கும். புவியியலில் ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்பினால், அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். வீரர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கடவுள் விரும்பினால், உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு உபேந்திர திவேதி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ' ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, சிறப்பாக பணியாற்றிய பிஎஸ்எப் 140வது பட்டாலியன் கமாண்டான்ட் பிரபாகர் சிங், ராஜ்புத்னா ரைபிள்ஸ் மேஜர் ரிதேஷ்குமார் மற்றும் ஹவில்தார் மோகித் கெய்ரா ஆகியோருக்கு சிறப்பு அங்கீகாரம் அளித்து ராணுவ தளபதி பாராட்டினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்