Paristamil Navigation Paristamil advert login

சருமத்தில் சுருக்கம் வராமல் தடுக்கும் எளிய வழிமுறைகள்

சருமத்தில் சுருக்கம் வராமல் தடுக்கும் எளிய வழிமுறைகள்

14 ஐப்பசி 2020 புதன் 05:51 | பார்வைகள் : 9413


 கடுமையான சரும சுருக்கங்கள் தென்படும் இடங்களாக முகம் மற்றும் கழுத்துப் பகுதி இருக்கிறது. மேலும் கண்ணைச் சுற்றி இருக்கும் இடங்கள், உதடு, கன்னங்களில் அதிக சுருக்கங்கள் தோன்றக்கூடும். வயது அதிகரிக்கும் போது சருமம் மிகவும் பலவீனமாகி, நெகிழும் தன்மையை இழப்பதால் சுருக்கங்கள் உண்டாகிறது. வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களும் சரும பாதிப்பை உண்டாக்குகின்றன.

 
குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கம் வயது முதிர்ச்சியைத் தூண்டி சருமத்தில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும். மேலும் புகை பிடிப்பதால் சருமம் தினமும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு ஆளாகிறது. இதனால் சருமம் வறண்டு, சுருக்கங்கள் எளிதில் உண்டாகும். முகத்தைக் கழுவும் போது கழுத்தையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. அப்போது கழுத்து பகுதியில் இருக்கும் அழுக்கு, நச்சு போன்றவை வெளியேறும்.
 
 
கழுத்து பகுதியை கழுவுவதற்கு சோப் பயன்படுத்தக்கூடாது. அது சருமத்தின் பி.எச். சமநிலையை மாற்றிவிடும். மூலிகை நீர் அல்லது மூலிகை சோப் பயன்படுத்தலாம். வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது சூரிய கதிர்வீச்சில் இருந்து கழுத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
 
அதிக அளவு தண்ணீர் பருகுவது சருமத்தில் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். சருமம் நீர்ச்சத்துடன் இருந்தால் சுருக்கங்கள் குறைவாக காணப்படும். முகத்திற்கு பயன்படுத்தும் பேஸ் மாஸ்கை வாரத்திற்கு ஒருமுறை கழுத்தில் தடவி நன்றாக சுத்தம் செய்யலாம். அதன் மூலம் கழுத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் வெளியேறும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்