புதிய பிரதமர் : அரசியல் கட்சித்தலைவர்களுடன் அவசரச் சந்திப்பு..!!

10 ஐப்பசி 2025 வெள்ளி 10:40 | பார்வைகள் : 823
புதிய பிரதமரை நியமிக்கும் கடமையில் ஜனாதிபதி மக்ரோன் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு அங்கமாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அவர் அனைத்துக்கட்சி சந்திப்பு ஒன்றில் ஈடுபட உள்ளார்.
இன்று ஒக்டோபர் 10, பிற்பகல் 2.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எலிசே மாளிகையில் இடம்பெறும் இந்த சந்திப்பின் பின்னர் ‘புதிய பிரதமர்’ யார் எனும் கேள்விக்கு விடை கிடைக்கும்.
அதேவேளை, RN மற்றும் LFI ஆகிய இரு கட்சிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு முடிவில், பதவி விலகிய Sébastien Lecornu மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இன்று வெள்ளிக்கிழமை மாலைக்குள் அடுத்த பிரதமர் யார் எனும் கேள்விக்கு விடை கிடைத்துவிடும் என தெரிவிக்கப்படுகிறது.