Paristamil Navigation Paristamil advert login

கொரிய தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு விழா

கொரிய தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு விழா

10 ஐப்பசி 2025 வெள்ளி 15:38 | பார்வைகள் : 175


கொரிய தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு விழாவானது, வெளிநாடுகளின் சிறப்பு விருந்தினர்களுடன் வட கொரியா மிக விமரிசையாகக் கொண்டாடியுள்ளது.

குறித்த விழாவில் வட கொரியாவின் இராணுவ பலம் மற்றும் ஆயுத பலத்தையும் வெளிப்படுத்த கிம் ஜோங் உன் முடிவு செய்துள்ளார். வியாழக்கிழமை வட கொரியாவின் முதன்மையான அரங்கம் ஒன்றில் மிக விமரிசையான விழா முன்னெடுக்கபப்ட்டுள்ளது.

ஆனால், மிக முக்கியமான நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை இரவு இராணுவ அணிவகுப்புடன் முன்னெடுக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

மிக சமீபத்தில் சீனா முன்னெடுத்த விழாவில் கலந்துகொண்ட கிம் ஜோங் உன், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் சிறப்பு விருந்தினராக அந்த விழாவில் பங்கேற்றார். வட கொரியாவின் மிக நீண்ட கால அரசியல், பொருளாதார ஆதரவாளராக இருக்கும் சீனா, 1950- 1953ல் நடந்த கொரியா போரிலும் வட கொரியாவிற்கு ஆயுத உதவிகளை அளித்துள்ளது.

வட கொரியாவும் அதன் புதிய இராணுவ நட்பு நாடான ரஷ்யாவும் கடந்த ஆண்டு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதிலிருந்து தங்கள் நெருக்கமான உறவை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு உதவ கிம் ஜோங் உன் ஆயிரக்கணக்கான வீரர்கள், ஏவுகணைகள் மற்றும் உதவிகளை அனுப்பியுள்ளார். இதன் ஒருபகுதியாக, சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவிற்கு தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது.

சீனாவின் பிரதமர் Li Qiang மற்றும் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெத்வதேவ், வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டோ லாம் ஆகியோர் வியாழக்கிழமை நடந்த கோலாகல விழாவில் பங்கேற்றுள்ளனர்.

கொரிய தொழிலாளர் கட்சியானது வட கொரியாவில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஒரே கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்