நடிகை திரிஷாவிற்கு திருமணம் ?
10 ஐப்பசி 2025 வெள்ளி 15:13 | பார்வைகள் : 610
சௌத் குயின் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை திரிஷா. அந்த வகையில் இவர் தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக தனது ஸ்டார் அந்தஸ்தை தக்க வைத்துள்ளார்.
அதிலும் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார்.
மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா.இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் 42 வயதாகும் திரிஷா எப்போது திருமணம் செய்து கொள்வார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் இவருடைய திருமணம் குறித்த புதிய தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது திரிஷாவிற்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாகவும், அதனால் புதிதாக வரன் தேடி வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திரிஷாவிற்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.இரு குடும்பத்தினருக்கும் பல ஆண்டுகளாகவே நல்ல பழக்கம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் திரிஷாவின் தரப்பிலிருந்து திருமணம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan