Paristamil Navigation Paristamil advert login

பாதுஷா

 பாதுஷா

10 ஐப்பசி 2025 வெள்ளி 16:13 | பார்வைகள் : 115


தீபாவளிக்கு செய்யும் இனிப்பு பலகாரங்களில் அதிரசத்திற்கு அடுத்தபடியாக பாதுஷாதான் இடம் பிடிக்கும். இதை வீட்டில் செய்வது மிகவும் எளியது. பாதுஷாவின் சுவையே அதன் நெய் சுவை மற்றும் சர்க்கரை பாகுதான். அதை எப்படி சரியான அளவில் கலப்பது என்பதை இந்த ரெசிபியில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மைதா - 1கிலோ
நெய் - 350 கிராம்
பேக்கிங் சோடா - 3 கிராம்
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு

செய்முறை :
மைதாவை அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதோடு நெய் சேர்க்க வேண்டும்.
பின் இரண்டையும் நன்கு கலக்க வேண்டும். இரண்டும் சரியான பதத்தில் கலப்பது அவசியம்.

பின் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதேசமயம் மாவு கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த கலவை 30 நிமிடங்களுக்கு ஊற வேண்டும்.

இதற்கிடையில் சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும். சர்க்கரை பாகு சரியான பதத்தை அறிய கையில் தொட்டு பாருங்கள். கையில் ஒன்றுக்கொன்று ஒட்ட வேண்டும். அவ்வாறு ஒட்டினால் அது சரியான பதம்.

அடுத்ததாக ஊற வைத்த மாவுகளை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பின் வடை அளவில் தட்ட வேண்டும். அதன் நடுவே ஓட்டை போட வேண்டும்.இப்படி அனைத்து மாவையும் செய்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டிய பாதுஷாக்களை எண்ணெய்யில் ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். பாதுஷாவை போடும்போது தீ குறைவாக இருக்க வேண்டும். இல்லையெனில் பாதுஷா கருக வாய்ப்புண்டு.

அனைத்தையும் பொன்னிறமான பதத்தில் சுட்டு எடுத்ததும் அவற்றை சர்க்கரை பாகுவில் சேர்க்க வேண்டும்.பாகுவில் 15 நிமிடங்கள் ஊறினால் போதுமானது.அவ்வளவுதான் பாதுஷா தயார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்