இலங்கையில் 10 பேரின் உயிரைப் பறித்த எலிக்காய்ச்சல்

10 ஐப்பசி 2025 வெள்ளி 16:49 | பார்வைகள் : 151
அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்சல் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை அநுராதபுரம் அலுவலக தொற்றுநோய் பிரிவின் வைத்திய அதிகாரி தேஜன சோமதிலக்க தெரிவித்தார்.
2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அநுராதபுரம் மாவட்டத்தில் வருடந்தோறும் 300 க்கும் அதிகமான எலிக்காய்சல் நோயாளிகள் பதிவாகின்றனர்.
அதிகமான நோயாளர்கள் அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பித்திகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவிலேயே பதிவாகியுள்ளனர்.
இதில், நாச்யாதுவ, நொச்சியாகம, விளச்சிய, திறப்பனை, இபலோகம, தலாவ, தம்புத்தேகம, ராஜாங்கனை, மதவாச்சி உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே எலிக்காய்சல் நோயினால் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.