Paristamil Navigation Paristamil advert login

ஆந்திராவில் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்

ஆந்திராவில் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்

11 ஐப்பசி 2025 சனி 05:04 | பார்வைகள் : 103


ஆந்திராவில் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் கூகுள் நிறுவனம் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கூகுள் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நிதி சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு, இந்தத் திட்டங்களுக்காக விசாகப்பட்டினத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒரேயடியாக 88 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. விசாகப்பட்டினத்தின் தார்லுவாடா, அடவிவரம் மற்றும் ராம்பில்லி ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைய உள்ளன. 2047 க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறிவிடும். அதில் முதன்மையான மாநிலமாக ஆந்திரா இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்