சமூக ஊடக பிரபலத்திற்கு வர்த்தக மோசடி வழக்கில் €150,000 அபராதம்!!!
10 ஐப்பசி 2025 வெள்ளி 19:59 | பார்வைகள் : 2441
பிரான்சில் பிரபல இன்ப்ளூயன்சரான மாய்வா ஜென்னம் (Maeva Ghennam) தவறான விளம்பரங்களை செய்ததற்காக ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், €150,000 அபராதமும் பெற்றுள்ளார்.
துபாயில் வசிக்கும் 28 வயதான மாய்வா, இரண்டே வாரங்களில் உடலின் சில பாகங்களை பெரிதாக்கும் கிரீம், உடல் எடையை குறைக்கும் தேநீர், முடி வளர்க்கும் பொருட்கள் உள்ளிட்ட தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி இருந்தார். இவர் விளம்பரத்துக்கு பணம் பெற்றிருந்தாலும், அதைப் பதிவுகளில் குறிப்பிடவில்லை என்பதே முக்கிய குற்றமாகும்.
2020 முதல் 2023 வரை பல வீடியோக்களில் நிதி முதலீட்டுகள், பந்தயக் கணிப்புகள் மற்றும் அழகு சேவைகள் போன்றவற்றை தவறான வாக்குறுதிகளுடன் விளம்பரபடுத்தியதற்காக வழக்குத் தொடரப்பட்டது. இவரது வீடியோக்கள் ஒன்றுக்கு €1,500 வருமானம் கொண்டிருந்ததோடு, சில மாதங்களில் இவரது வருமானம் €60,000 ஆக இருந்தது. வழக்கின் போது அவர், நிதி தயாரிப்புகளில் நேரில் முதலீடு செய்யவில்லை என்றும், சில விளம்பரங்களில் மிகைப்படுத்தியது உண்மை என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan