Paristamil Navigation Paristamil advert login

பீஹார் தேர்தலில் பர்தா அணிந்த பெண்களை அடையாளம் காண ஏற்பாடு

பீஹார் தேர்தலில் பர்தா அணிந்த பெண்களை அடையாளம் காண ஏற்பாடு

11 ஐப்பசி 2025 சனி 13:33 | பார்வைகள் : 168


 பீஹாரில் ஓட்டுப்பதிவு நடக்கும் நிலையங்களில் பர்தா அணிந்த பெண் வாக்காளர்களை மரியாதைக்குரிய முறையில் அடையாளம் காணும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை:


ஓட்டளிக்க வரும் பர்தா அணிந்த பெண்களை அடையாளம் காணும் பணியில் அவர்களின் தனியுரிமை காக்கப்படும். 90,712 அங்கன்வாடி ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அவர்கள் பர்தா அணிந்து வரும் பெண்களை அடையாளம் காணும் பணியில் நியமிக்கப்படுவர். கண்ணியமான முறையில் அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூ றப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்