மீண்டும் பிரதமராக Sébastien Lecornu..!!

11 ஐப்பசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 834
பிரதமராக Sébastien Lecornu மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்து நான்கு நாட்களின் பின்னர் மீண்டும் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஒக்டோபர் 10, வெள்ளிக்கிழமை மாலை அவரை மீண்டும் பிரதமராக நியபிப்பதாக ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார். முன்னாள் இராணுவ ஆயுத அமைச்சராக கடமையாற்றிய Sébastien Lecornu, சென்ற மாதம் பிரதமராக நியமிக்கப்பட்டு, பின்னர் ஒரே மாதத்தில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
அதை அடுத்து, ஜனாதிபதி மக்ரோன் அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டு தற்போது மீண்டும் அவரையே பிரதமராக அறிவித்துள்ளார்.
"பிரெஞ்சுக்காரர்களை எரிச்சலூட்டும் இந்த அரசியல் நெருக்கடிக்கும், பிரான்சின் பிம்பத்திற்கும் அதன் நலன்களுக்கும் மோசமான இந்த உறுதியற்ற தன்மைக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்." என Sébastien Lecornu பதிவிட்டுள்ளார்.