முன்னர் எப்போது தேவைப்படாத அளவில் 'ஆட்சிக்கலைப்பு' தேவை! - மரீன் லு பென் கொந்தளிப்பு!!

11 ஐப்பசி 2025 சனி 08:00 | பார்வைகள் : 946
முன்னர் எப்போதும் தேவைப்படாத அளவில் மிக அவசரமான ஆட்சிக்கலைப்பு தேவை எனவும், மீண்டும் தேர்தல் நடத்தப்படவேண்டும் எனவும் எதிர்க்கட்சித்தலைவர் மரீன் லு பென் தெரிவித்துள்ளார்.
நாட்டின் புதிய பிரதமராக Sébastien Lecornu நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, Rassemblement national கட்சித்தலைவர் மரீன் லு பென் இதனை அறிவித்தார். அரசாங்கத்தின் நோக்கம் 49.3 எனும் அரசியலமைப்பை பயன்படுத்துவதே. அதனை பயன்படுத்தி வாக்கெடுப்பின்றி வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதாகும். அரசாங்கத்தை கலைப்பதற்குரிய காலம இது. விரைவாக அதனை செய்யவேண்டும்' என லூ பென் தெரிவித்தார்.
பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்த Sébastien Lecornu , நான்கு நாட்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதி அவரையே பிரதமராக நியமித்திருந்தார். அவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவருவோம் என எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.