Paristamil Navigation Paristamil advert login

எள்ளின் அற்புதப் பலன்கள்!

எள்ளின் அற்புதப் பலன்கள்!

11 ஐப்பசி 2025 சனி 16:21 | பார்வைகள் : 175


நம் முன்னோர்கள் உணவில் எள் சேர்த்ததற்கு முக்கிய காரணம், அதன் அபரிமிதமான ஆரோக்கிய பலன்களே ஆகும். குறிப்பாக, இந்த சிறிய விதைக்குள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் நிறைந்துள்ளது.

எள்ளின் மகத்துவத்திற்கு காரணம், அதில் உள்ள எண்ணற்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, கால்சியம், மற்றும் பிற அத்தியாவசியத் தாதுக்கள் ஆகும். இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவாகும்.
 

பெண்களுக்கு, எள்ளை தினசரி உணவில் சேர்ப்பது மார்பக புற்றுநோயை தடுக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இது இரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளராமல் பாதுகாக்கிறது. 

மார்பகப் புற்றுநோய் மட்டுமின்றி, பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய்களையும் தடுக்க எள் உதவுகிறது. இது குடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி, குடலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்கிறது.

எள் வகைகளில், கருப்பு எள்தான் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை கொண்டிருப்பதால், அதுவே மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்