Paristamil Navigation Paristamil advert login

Forum des Halles இல் பலத்த வன்முறை! - காவல்துறை வீரர் படுகாயம்! - மூவர் கைது!!

Forum des Halles இல் பலத்த வன்முறை! - காவல்துறை வீரர் படுகாயம்! - மூவர் கைது!!

12 ஐப்பசி 2025 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 705


Forum des Halles இல் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது பலத்த வன்முறை வெடித்துள்ளது. இதில் காவல்துறை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

group L2B எனும் இசைக்குழுவினர் நேற்று ஒக்டோபர் 11 சனிக்கிழமை அங்கு இலவச இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதனைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். அதனை காவல்துறையினர் தடுத்து  நிறுத்த முயன்றனர்.

ஆனால் வன்முறை காவல்துறையினர் பக்கம் திரும்பியது. காவல்துறைவீரர்கள் மீது ரசிகர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். வீரர் ஒருவரை கீழே தள்ளி வீழ்த்தி ஏறி மிதித்துள்ளனர். அதில் அவர் படுகாயமடைந்தார்.

மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்