Paristamil Navigation Paristamil advert login

மெக்சிகோவில் ரேமண்ட் புயல் - 28 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் ரேமண்ட் புயல் - 28 பேர் உயிரிழப்பு

12 ஐப்பசி 2025 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 157


வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயலால் மெக்சிகோவில் கனமழை பெய்து வருவதால் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அந்நாட்டின் 32 மாகாணங்களிலும் கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அந்நாட்டின் வெரகுரூஸ், குவாரடிரோ, ஹிடல்கோ, சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன.

கனமழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக மெக்சிகோவில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்பு பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. ரேமண்ட் நாளை கரையை கடக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்