விராட் கோலி RCB அணியில் இருந்து விலகுகிறாரா? - வெளியான தகவல்

12 ஐப்பசி 2025 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 119
RCB அணியில் இருந்து விராட் கோலி வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்முறையாக 2025 ஐபிஎல் தொடரில் RCB அணி கோப்பையை வென்றது.
முதல் ஐபிஎல் தொடரில் தற்போது வரை RCB அணியில் விளையாடும் ஒரே வீரர் அந்த அணியின் முன்னாள் அணித்தலைவர் விராட் கோலி மட்டுமே.
ஐபிஎல் தொடர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற பல்வேறு சாதனைகளை விராட் கோலி தன் வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், விராட் கோலி RCB அணியில் இருந்து வெளியேறப்போவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஐபிஎல் தொடருக்கு முன்னர் RCB அணியுடன் புதுப்பிக்க வேண்டிய வர்த்தக ஒப்பந்தத்தை, விராட் கோலி புதுப்பிக்காமல் உள்ளதால் அவர் RCB அணியில் இருந்து வெளியேற உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடரின் போதே அணிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை அணி நிர்வாகம் அவருக்கு வழங்க முன்வந்த போது அந்த பொறுப்பை நிராகரித்து, ரஜத் படிதாரை முன்மொழிந்தார்.
அதே போல், சர்வதேச T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட அவர், ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார்.
2027 ODI உலகக்கோப்பை வரை விளையாட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அதுவரை அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது.
அதேவேளையில் அவர் ODI வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இது குறித்து விராட் கோலியோ, RCB அணி நிர்வாகமோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.