இந்திய ODI அணியில் இருந்து நீக்கியதற்கு காரணம் உள்ளது - மனம் திறந்த ஜடேஜா

13 ஐப்பசி 2025 திங்கள் 12:15 | பார்வைகள் : 124
இந்திய ODI அணியில் இருந்து நீக்கியது ஆச்சரியமளிக்கவில்லை என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. கடந்த 2024 T20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னர், T20 வடிவத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது அவர் மேற்கிந்தியா தீவு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.
ஆனால் வரும் அக்டோபர் 19 ஆம் திகதி தொடங்க உள்ள அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
இது குறித்து பேசிய அவர், "ஒருநாள் போட்டிகளில் நான் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது என் கையில் இல்லை. முடிவில் அணி நிர்வாகம், அணித்தலைவர் மற்றும்தலைமை பயிற்சியாளர் கைகளில் உள்ளது.
அவுஸ்திரேலியா தொடருக்கு தேர்வு செய்யப்படாததன் காரணம் குறித்து அணித்தலைவர், தேர்வு குழு தலைவர், தலைமை பயிற்சியாளர்கள் என்னிடம் முன்னதாகவே பேசி விட்டார்கள்.
இதனால் அணியை அறிவிக்கும் போது எனக்கு ஆச்சரியம் இல்லை.
2027 உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் நடைபெறும் ஒருநாள் போட்டிகளின் அடிப்படையிலே அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கருதுகிறேன்.
அப்படி வாய்ப்பு கிடைத்தால் எண்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன். உலகக் கோப்பையை வெல்வது அனைவரின் கனவு. கடந்த முறை அருகே சென்று அதை தவறவிட்டோம். 2027 உலகக்கோப்பையை வெல்வதற்கு முயற்சிப்போம்" என தெரிவித்துள்ளார்.