மெஸ்ஸியின் சக அணி வீரர் வெற்றியுடன் ஓய்வு- உருக்கத்துடன் கூறிய வார்த்தை

13 ஐப்பசி 2025 திங்கள் 12:15 | பார்வைகள் : 117
இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வந்த ஜோர்டி ஆல்பா வெற்றியுடன் விடைபெற்றார்.
MLS கால்பந்து தொடரின் நேற்றையப் போட்டியில் இன்டர் மியாமி (Inter Miami) அணி 4-0 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா யுனைடெட் அணியை வீழ்த்தியது.
ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 39 மற்றும் 87வது நிமிடங்களில் கோல் அடித்தார்.
அதேபோல் நட்சத்திர வீரர் ஜோர்டி ஆல்பா (Jordi Alba) 52வது நிமிடத்திலும், லூயிஸ் சுவாரஸ் (Luis Suarez) 61வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இந்தப் போட்டியுடன் ஜோர்டி ஆல்பா விடைபெற்றார். அவர் இன்டர் மியாமி அணிக்காக 95 போட்டிகளில் 14 கோல்கள் அடித்துள்ளதுடன் 38 கோல்களுக்கு உதவி (Assists) புரிந்துள்ளார்.
கடைசிப் போட்டியின் வெற்றிக்கு பின் பேசிய அவர், "உடல் ரீதியாக, நான் இன்னும் நன்றாக உணர்கிறேன், ஆனால் அது மிகவும் நேர்மையானது, செய்ய வேண்டிய நியாயமான விடயம் என்று நான் நினைக்கிறேன். மேலும் இது நான் தனியாக எடுக்கும் ஒரு முடிவு. அது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஸ்பானிஷ் வீரரான ஜோர்டி ஆல்பா ஸ்பெயின் அணிக்காக 93 போட்டிகளில் 9 கோல்களும், பார்சிலோனா அணிக்காக 17 கோல்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.