இலங்கையில் சகோதரனை வாளால் வெட்டிக் கொலை செய்தவர் கைது
13 ஐப்பசி 2025 திங்கள் 16:52 | பார்வைகள் : 2586
குருநாகல், குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பெப்போலேவெல, குடா கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் என தெரியவந்துள்ளது.
விசாரணையில், குறித்த நபர் தனது சகோதரரின் வீட்டில் வேறொரு குழுவுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, சகோதரருடன் ஏற்பட்ட முறுகல் நிலைய தீவிரமடைந்ததில் சகோதரர் அவரை வாளால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan