Paris 19 குடியிருப்பு பார்கிங்கில் ஒருவர் கத்திக்குத்தில் உயிரிழப்பு!!

13 ஐப்பசி 2025 திங்கள் 19:34 | பார்வைகள் : 773
பரிஸ் நகரின் 19வது வட்டாரத்தில் உள்ள Mathis தெருவில், வெள்ளிக்கிழமை இரவு ஒரு குடியிருப்பு கட்டடத்தின் பார்கிங்கில் இருபதுகளில் உள்ள இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தார்.
அவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், காயங்களால் உயிரிழந்துள்ளார். இது ஒரு குடியிருப்பில் உள்ள சிலர் மற்றும் அங்கு வசிப்பதில்லை என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கிடையிலான சண்டையிலிருந்து ஏற்பட்டதாக தெரிகிறது.
குடியிருப்பில் உள்ள சிலர் அந்த நபரைக் கிளம்புமாறு கூறியபோது, அவர் கோபத்தில் ஒருவர் மீது கை வைத்து, பிறகு கத்தியை எடுத்து அந்த இளைஞரை குத்தியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் அங்கு குடியிருப்பவராக இருக்கக்கூடும் என்றும், இந்த நிலையில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை தொடருகிறது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.